தனி இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

Estimated read time 1 min read

மக்கள் மேடை என்ற பெயரில் மக்களின் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

மக்கள் மேடை என்ற பெயரில் மக்களின் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் மேடை, மக்கள் இயக்கத்தில் இணைய தொலைப்பேசி எண் கொடுத்து லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் ஒன்றிணைவோம் என்றும் அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைக்கோர்க்கலாம், ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம் என்றும் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் என யார் வேண்டுமானாலும் மக்கள் மேடை இயக்கத்தில் சேரலாம் என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த மாநிலத்திற்காக வேலை செய்ய நினைக்குற அத்தனை பேரும் ஒண்ணு சேர்ந்து மக்கள் சக்தியா உருவாகலாம் எனவும் வீடியோ மூலம் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author