பெரம்பூரில் விஜய் முன்னிலை!” – தபால் வாக்குகளில் தவெக ‘மாஸ்’ என்ட்ரி! –

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் ஆரம்பகட்டத்திலேயே அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் விஜய்யின் தாக்கத்தைப் பற்றிப் பேசிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலை வகித்து வருகிறார். தனது கன்னித் தேர்தலிலேயே பெரம்பூர் போன்ற முக்கியமான தொகுதியில் தபால் வாக்குகளில் முன்னிலை (75) பெற்றிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்குப் பலத்த சவாலாக விஜய் உருவெடுத்துள்ளாரா என்ற கேள்விக்கு, இந்த ஆரம்பகட்ட முன்னிலை ஒரு வலுவான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author