90-களில் ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, ‘விஐபி’, ‘பூச்சூடவா’, ‘ஜாலி’, ‘ஆசை தம்பி’ போன்ற பல பிரபல படங்களில் நடித்த நடிகர் அப்பாஸ், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி அளிக்கிறார்.
சினிமாவை விட்டு ஒதுங்கி நியூசிலாந்தில் வசித்து வந்த அவர், தற்போது ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார்.
இந்தப் படத்தை பியாண்டு பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார்.
படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார்.
கதாநாயகியாக கவுரி பிரியா நடித்துவர, இசை அமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் கவனிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி தருகிறார் நடிகர் அப்பாஸ்!
