தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் அரசு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு காசோலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.