கடந்த 8 மாதங்களில் சீனாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் இணைய வழி விற்பனை 4.6 விழுக்காடு அதிகரிப்பு

Estimated read time 1 min read

இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் சீனா முழுவதிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் இணைய வழி விற்பனை 4.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. வணிக புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, செல்லிடப்பேசி மற்றும் வெளிப்புற ஆடை ஆன்லைன் கடைகளின் சில்லறைத் தொகை முறையே 6.8 மற்றும் 6.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. வேளாண் உற்பத்திப் பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனைத் தொகை 12.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

“பட்டுப்பாதை இணை வணிகம்”  கூட்டாளி நாடுகளின் எண்ணிக்கை 38யை எட்டியுள்ளது. கசகஸ்தானின் ஒட்டகப் பால், கன்னியாவின் காப்பிக் கொட்டை முதலியவற்றின் இணைய வழி சில்லறை விற்பனை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது.

படம்:VCG

You May Also Like

More From Author