சர்வதேச சந்தை நிலவரங்களின் பின்னணியில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22, 2026) சற்று குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது.
காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹30 குறைந்து ₹14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ₹240 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ₹1,18,240 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலை சரிந்துள்ள அதே வேளையில், வெள்ளி விலை கிலோவுக்கு அதிரடியாக ₹5,000 உயர்ந்து, ₹2.95 லட்சத்தை எட்டியுள்ளது சிறு முதலீட்டாளர்கள் மற்றும் வெள்ளி வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
