இந்தியா – ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்..!

Estimated read time 1 min read

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று அசத்தியது.

ஆனாலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியை குவித்து இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரை இழக்கும் வாய்ப்பை தவிர்த்துள்ளது. இந்நிலையில் ப்ரிஸ்பேனில் இன்று நடைபெறும் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஆர்வம் காட்டுகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு கொண்டுள்ளது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இரு வீரர்களும் இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மின்னலுடன் வானிலை மோசமடைந்தது. கனமழைக்கான அறிகுறி நிலவி வருகிறது. மைதானம் சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் மின்னல் அடித்தது. இதனால், மோசமான வானிலை மற்றும் வீரர்கள் பாதுகாப்பு கருதி ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author