ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நிறைவு: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ  

Estimated read time 1 min read

கடந்த 2025 மே 7 ஆம் தேதி நள்ளிரவு சரியாக 1:05 மணிக்குத் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவை இந்திய ஆயுதப் படைகள் இன்று கொண்டாடுகின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாகத் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.
சரியாக ஓராண்டு முடிந்த நிலையில், அதே அதிகாலை 1:05 மணிக்கு இந்திய ராணுவம் இந்தத் திட்டத்தின் முக்கியக் காட்சிகளை உள்ளடக்கிய வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளது.
“இந்தியா எதையும் மறக்காது – இந்தியா எவரையும் மன்னிக்காது” என்ற எச்சரிக்கையுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author