சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் ஆசிய முதலீட்டு வங்கியின் அலுவலகம் ஒன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக நவம்பர் 3ஆம் நாள் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் நிதி சேவைகள் மற்றும் கருவூலத் துறையின் தலைவர் சூ சேங்வூ கூறும் போது,
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் உறுப்புகளில் ஒன்றான ஹாங்காங், இவ்வங்கிக்கு ஆதரவளித்து, ஹாங்காங்கின் சுறுச்சுறுப்பான மூலதனச் சந்தை, உலகளாவில் சிறப்பு நிலை சேவை மற்றும் பல்வகை நாணயப் பொருட்கள் முதலிய மூலவளங்களைப் பயன்படுத்தி, ஹாங்காங்கில் இவ்வங்கியின் முதலீட்டுச் சேகரிப்பு, கடன் வினியோகம், முதலீடு மற்றும் நிதி மேலாண்மை போன்ற துறைகளிலான இயக்கத்திற்கு உதவி செய்ய ஹாங்காங் பாடுபடும்.
“ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு எனும் தனிச்சிறப்பு வாய்ந்த மேம்பாடுகளை ஹாங்காங் விரிவாக்கி, இவ்வங்கியின் நெடுநோக்கு வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்கும் என்று தெரிவித்தார்.
