இந்தோனேசியா பிரிக்ஸின் அதிகார உறுப்பு நாடாக மாறியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 6ஆம் நாள் வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்தார்.
பெரிய வளரும் நாடு மற்றும் தெற்குலகின் முக்கிய சக்தியான இந்தோனோசியா பிரிக்ஸ் எழுச்சிக்கு ஒப்புக்கொள்வதோடு, பிரிக்ஸ் பிளஸ் ஒத்துழைப்புகளில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளது.
பிரிக்ஸில் இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்தது பிரிக்ஸ் நாடுகள் மற்றும் தெற்குலகின் கூட்டு நன்மைக்கும் பொருந்தியது. பிரிக்ஸ் அமைப்பு முறையின் வளர்ச்சிக்கு அது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றுமென நம்புவதாகவும் அவர் கூறினார்.