“6 எம்.எல்.ஏ-க்கள் எங்கே?” : விஜய்யின் பக்கம் சாய்கிறார்களா.? 

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வரும் வேளையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் இன்று நடைபெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, கட்சியின் பலமாக கருதப்படும் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

முன்னதாக இவர்கள் இருவரும் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாகத் தலைமை கூட்டிய கூட்டத்தையே இவர்கள் புறக்கணித்திருப்பது, அவர்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளனரா அல்லது கட்சியில் புதிய கோஷ்டியை உருவாக்குகின்றனரா என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.

இது அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author