மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வந்தாச்சு! – .. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடருமா என்ற விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மே மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கி கணக்கில் அதிரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திட்ட மறுசீரமைப்புக்காகக் கூடுதல் அவகாசம் தேவை என அரசு தெரிவித்திருந்தது. இதனால் மே மாதப் பணம் இன்று வராது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சொன்னபடி இன்றே ரூ.1,000 விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டப் பயனாளர்களுக்கும் நேற்று நிதியுதவி வரவு வைக்கப்பட்டதால், கல்லூரி மாணவ – மாணவியர் மற்றும் இல்லத்தரசிகள் என ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author