
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட மேலாளர்கள் மீது இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
#NewsUpdate || பாட்டிலுக்கு ரூ.10 – தண்டனை உறுதி#TASMAC #TamilNadu #LiquorSales #GovernmentAction #NEWSJ pic.twitter.com/TQlElk0mnK
— NewsJ (@NewsJTamil) May 14, 2026
“>
இதன் மூலம் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், தவறு செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான தண்டனையை உறுதி செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
