‘நன்றி முதல்வர் விஜய்ணா!’: தியேட்டர்களில் தெறிக்கும் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்  

Estimated read time 1 min read

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், பல்வேறு நிதிச் சிக்கல்களைக் கடந்து இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ரிலீஸை உறுதி செய்ய சூர்யா நேரடியாகத் தலையிட்டு நிதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது, அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘கருப்பு’ படத்திற்கு காலை 9 மணிக்கே சிறப்பு காட்சி அனுமதி வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திரையரங்குகளில் “எங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சிறப்பு நன்றி” என்ற கார்டு திரையிடப்பட்டது.
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து சூர்யாவின் படத்திற்குத் தங்களின் அமோக ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author