சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தாய் ச்சீ சின், போரின் சோதனையைக் கடந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவர் சிறந்த குடும்ப விதிமுறையின்படி குழந்தைகளை வளர்த்து வந்தார். புரட்சிகர குடும்பத்தில் வளர்ந்த ஷிச்சின்பிங் எப்போதுமே குடும்பம் மீது பெரும் கவனம் செலுத்தி வருகிறார்.
வடக்கு ஷாஆன்சி மாகாணத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தின் கட்சிக் குழுச் செயலாளர் முதல், கட்சி மற்றும் நாட்டின் அதியுயர் தலைவர் பதவி வரை, ஷிச்சின்பிங் தன்னை பொது மக்களுக்கு சேவைபுரியும் பணியாளராகப் பார்த்து செயல்பட்டு வருகிறார்.
கட்சி மத்திய கமிட்டி வகுத்த கொள்கைகள் நல்லதா இல்லையா என்பது பொது மக்களின் மறுமொழியின் மூலம் கணிக்கப்பட வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுக்கு சேவைபுரிய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள், ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையிலும் நடைமுறையிலும் ஆழமாகப் பதிந்துள்ளன.
கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரான ஷிச்சின்பிங், கட்சி, நாடு மற்றும் பொது மக்கள் மீதான தனது விசுவாசத்துடன், சீனர்களின் குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு விடா முயற்சிகளை மேற்கொண்டு, சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற சீன மக்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
