சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு 38 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், அமெரிக்கா சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது, ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளையும் கடுமையாக மீறி, சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பு நலன்களையும் கடுமையாக ஊறுபடுத்தி, சர்வதேச சட்டத்தை கடுமையாக அத்துமீறி, தைவான் சுதந்திர பிரிவினையாளர்களுக்குத் தவறான சமிக்கையை விடுத்துள்ளது. 

இது, சீன-அமெரிக்க உறவைச் சீர்குலைத்து, தைவான் நீரினையின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பாதித்து, தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்காது என்ற அமெரிக்கத் தலைவரின் கூற்றுக்குப் புறம்பானது. சீனா இதற்கு கடும் மனநிறைவின்மையையும் உறுதியான எதிர்ப்பையும் தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.

தைவானுக்கு ஆயுதங்களை விற்பதையும் தைவான் பிரதேசத்தின் தலைவர் ஆயுத ஆற்றல் மூலம் தைவான் சுதந்திரத்தை நாடுவதற்கு ஆதரவளிப்பதையும் நிறுத்துமாறு சீனா அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை சீனா உறுதியுடன் பேணிக்காக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author