சின்ச்சியாங்கின் ஊழியர் வளர்ப்பு குறித்து ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி கட்சிக் கல்லூரியின் சின்ச்சியாங் சிறுபான்மை தேசிய ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் முக்கிய உத்தரவிட்டார்.

அவர் கூறுகையில், கட்சிக் கல்லூரியின் சின்ச்சியாங் ஊழியர்களுக்கான வகுப்பை நிறுவுவது, கட்சியின் மத்திய கமிட்டியின் முக்கிய தீர்மானமாகும். கடந்த 70 ஆண்டுகளாக, கட்சி மற்றும் நாட்டின் இலட்சியத்தின் வளர்ச்சியுடன் இவ்வகுப்பு முன்னேறி, ஒரு தொகுதியான தலைசிறந்த ஊழியர்களை வளர்த்துள்ளது.

சின்ச்சியாங்கின் ஊழியர் அணி கட்டுமானத்தை வலுப்படுத்தி, சின்ச்சியாங்கின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றி, சின்ச்சியாங்கின் சமூக நிதானத்தன்மையையும், நீண்டகால பாதுகாப்பையும் விரைவுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறது என்று தெரிவித்தார்.


புதிய வளர்ச்சிப் போக்கில், இவ்வகுப்பு நிறுவப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவை துவக்க புள்ளியாகக் கொண்டு, புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாக கொண்டு, உயர் தரமாகவும், பயனுள்ள முறையிலும் இவ்வகுப்பை நடத்தி, சின்ச்சியாங்கிற்கு மேலதிக உயர் தகுதியுடைய ஊழியர்களை வளர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author