2024ஆம் ஆண்டில் சீனாவின் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விரைவுப் பொதிகளின் எண்ணிக்கை 17ஆயிரத்து 450கோடியைத் தாண்டியது.
விரைவஞ்சல் துறையின் மொத்த வருமானம் 1லட்சத்து 40ஆயிரம் கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இவ்விரு எண்ணிக்கைகள் முறையே 21விழுக்காடு மற்றும் 13விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சீனத் தேசிய அஞ்சல் பணியகத் தலைவர் ட்சோச்சுன்ஜியூ 8ஆம் நாள் தெரிவித்தார்.
மேலும் கிராமப்புறங்களில் விரைவு அஞ்சல் போக்குவரத்து முறைமையின் கட்டுமானத்தை சீனத் தேசிய அஞ்சல் பணியகம் விரைவுபடுத்துவதோடு, பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு சீன விரைவஞ்சல் துறை நிலையான அதிகரிப்புப் போக்கைத் தொடர்ந்து நிலைநிறுத்தும். அனுப்பப்படும் விரைவுப் பொதிகளின் எண்ணிக்கை 19ஆயிரம் கோடியையும் விரைவஞ்சல் துறையின் வருமானம் 1லட்சத்து 50ஆயிரம் கோடி யுவானையும் எட்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது.