தமிழ்நாட்டின் நிதிநிலைமை மோசமா இருக்கு…! விஜயின் மாஸ் ஸ்பீச்…!!! 

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், டாக்டர் பிரபு, கீர்த்தனா, ஆதவ் ஆதர்ஜனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நிலையில் பதவியேற்பு விழாவுக்கு பிறகு முதலமைச்சர் விஜய் தன்னுடைய முதல் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இனி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் முதல் முறையாக கையெழுத்து போட்டார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை உருவாக்குவதாக உறுதி கொடுத்த அதற்கான கோப்பிலும், போதை பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்புகளிலும் கையெழுத்து போட்டார்.

மேலும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக விழா மேடையில் விஜய் தன்னுடைய முதல் உரையை தொடங்கினார். அவர் பேசும்போது என் நெஞ்சில் குடியிருக்கும் என தொடங்கி அனைவருக்கும் வணக்கம் கூறினார். அதன் பிறகு சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டருக்கு பிறந்த பிள்ளை நான். எனக்கும் பசி என்றால் என்ன என்று தெரியும் வறுமை என்றால் என்ன என்று தெரியும்.

நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன் அண்ணனாக தம்பியாக அப்படித்தான் நான் நினைக்கிறேன் நீங்கள் அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடத்தை கொடுத்தீர்கள். இப்ப அதை எல்லாம் விட்டுட்டு உங்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு இந்த விஜய் வந்துள்ளேன்.

உங்கள் விஜய் வந்துள்ளேன். இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா நண்பர்களுக்கு தான் நான் முதலில் நன்றி சொல்லணும் உங்களால் தான் இது நடந்தது. என்றார்.

பசி என்றால் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும் நான் மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் கிடையாது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை தற்போது மோசமாக உள்ளது என்பது எனக்கு தெரியும். நீங்கள் என்னை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்துள்ளீர்கள் ஒளிவு மறைவு என்று இதை நடத்துவேன்.

இந்த விஜய் தப்பு செய்யவும் மாட்டான் தப்பு செய்யவும் விடமாட்டான் ஒருவேளை யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இப்பவே அழித்து விடுங்கள். ஒரே பவர் சென்டர் அது நான்தான் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author