விஜய் போட்ட முதல் கையெழுத்து தெரியுமா…? 

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், டாக்டர் பிரபு, கீர்த்தனா, ஆதவ் ஆதர்ஜனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நிலையில் பதவியேற்பு விழாவுக்கு பிறகு முதலமைச்சர் விஜய் தன்னுடைய முதல் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இனி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் முதல் முறையாக கையெழுத்து போட்டார். மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை உருவாக்குவதாக உறுதி கொடுத்த அதற்கான கோப்பிலும் கையெழுத்து போட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author