தமிழக அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில், அரசியல் நாகரிகத்தின் உச்சக்கட்டமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் மூத்த அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்க மேடைக்கு வந்தார்.
அப்போது, மரபு மற்றும் அனுபவத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், மேடையிலிருந்த முதலமைச்சர் விஜய் மற்றும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உடனடியாக எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர்.
தமிழக அரசியலில் நிலவி வரும் கசப்பான மோதல் போக்கிற்கு மத்தியில், ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இளம்தலைமுறைத் தலைவர்கள் காட்டிய இந்த உயரிய பண்பு, அங்கு கூடியிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
செங்கோட்டையன் ஐயா பதவியேற்று முடியும் வரை தலைவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையன் ஐயா தான் நம்ம கட்சில ரொம்ப அதிர்ஷ்டசாலி…இந்த மரியாதை அவருக்கு வேறு எங்கு கிடைத்துவிடும்.. pic.twitter.com/U8rvBMFNTC
— Mʀ.Exᴘɪʀʏ (@Jana_Naayagan) May 10, 2026
“>
