வரவிருக்கும் 2026 மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியாகக் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நேரடியாகக் குறிப்பிடுவதைத் தவிர்த்ததால், விவாதங்கள் எழுந்தது.
இந்நிலையில், இந்த விவாதங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த குழப்பமும் இல்லை. அமித்ஷா ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அதிமுக தலைமையில் போட்டியிடப்பட உள்ளதால், அவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்.” எனக் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்; நயினார் நாகேந்திரன் உறுதி
