
ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார், தனது தொகுதியில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டுத்தொட்டி பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்ற அவருக்கு, அப்பகுதி பெண்கள் கலச சொம்புகளை ஏந்திப் பூரண கும்ப மரியாதை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது பேசிய ஜெயக்குமார், தோல்வி பயத்தில் உள்ள திமுகவினர் ராயபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.8000 மதிப்பிலான பரிசு கூப்பன்களை வழங்கி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இத்தகைய முறைகேடுகள் எடுபடாது என்றும், மக்கள் தங்களின் வளர்ச்சிக்காகத் தமக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
