உலகில் முதலாவது இடத்தில் சீனாவின் பொருட்களின் இணையம்

2024ஆம் ஆண்டு உலகப் பொருட்களின் இணைய மாநாடு நவம்பர் 3ஆம் நாள் நடைபெற்றது. இதில், உலகின் முதலாவது உலகப் பொருட்களின் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த இணையத்தின் எண்ணியல் பொருளாதார வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டது. தரவுகளின்படி, இவ்வாண்டில் சீனாவின் பொருட்களின் இணையத் தொடர்பு எண்ணிக்கை 300 கோடியைத் தாண்டும்.

நுண்ணறிவு அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் இணையத் தொடர்பு தொழில் நுட்பத்தை முக்கிய நடவடிக்கையாக கொண்டு, பொருட்கள் இணையம் மனிதக் குலம், இயந்திரம், பொருட்கள் ஆகியவற்றை இணைக்கின்றது. 2024ஆம் ஆண்டின் ஆக்ஸ்ட் திங்கள் இறுதி வரையிலான இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 256 கோடியே 50 இலட்சமாகும். இதனிடையே 2030ஆம் ஆண்டுக்குள், உலக பொருட்களின் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த இணைய எண்ணியல் பொருளாதார உற்பத்தி மதிப்பு 50 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

படம்:CFP

Please follow and like us:

You May Also Like

More From Author