சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 12ஆம் நாள் சந்தித்துரையாடினார்.
கியூபா, பேரு, அன்டிகுவா பர்புடா, பகாமாசு, பார்படோசு, டொமினிக்கா, கிரெனடா, கயானா, ஜமைக்கா, சுரிநாம், திரினிடாட் டொபாகோ உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு, இம்மன்றம் நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில், சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் சீன-கரீபியன் நாடுகள் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு விரைவாக வளர்ந்து வருகிறது. தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்புகள் அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளன.
அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, முக்கிய நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஒன்றுக்கு ஒன்று இரு தரப்பும் ஆதரவளிக்கும். பயனுள்ள ஒத்துழைப்புகளை விரைவுபடுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான உயர் தர கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.