பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த உடன், கரையில் இருந்த அதிகாரிகளை எச்சரித்ததற்காக கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.
கப்பல் இப்போது இடிந்து விழுந்த பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜின் இடிபாடுகளில் சிக்கியுள்ளது.
இந்த ஸ்காட் கீ பிரிட்ஜ் கிட்டத்தட்ட 3 கிமீ நீளமும், ஒரு பெரிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையே காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியும் புதன்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.