தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு தற்போது இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் வழக்கம்போல் அனைத்து முதலமைச்சர்களுக்கும் வழங்கப்படும் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.
மேலும் நேற்று முதல்வர் விஜய் உட்பட அமைச்சர்கள் 9 பேர் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 233 எம்எல்ஏக்களும் பொறுப்பேற்று வருகிறார்கள்.
மேலும் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தங்களது பெரும்பான்மையின் நிரூபிக்க இருக்கிறது.
