அதன்படி, 2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயம், நாடு முழுவதிலும் உயர்ந்த 277% வழக்குத் தீர்வு விகிதத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வந்த புகார்களை விட அதிகமான வழக்குகளை அந்த மாதத்தில் தீர்த்து வைத்திருப்பது, நிலுவையில் இருந்த வழக்குகள் கணிசமாக குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
இந்தச் சிறப்பான செயல்திறன், இந்திய அளவில் பல மாநிலங்களும் தேசிய நுகர்வோர் புகார் தீர்ப்பாயமும் (NCDRC) 2025 ஜூலை மாதத்தில் 100% க்கும் மேலான வழக்குத் தீர்வு விகிதத்தை எட்டியிருப்பதைக் காட்டுகிறது.
இதன்மூலம் நாட்டிலேயே நுகர்வோர் குறைகள் தீர்க்கும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன.

ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான e-Jagriti தளத்தின் பயன்பாடே இச்சாதனையின் முக்கியக் காரணம்.
இதன் மூலம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்யப்பட்டு, பல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
இந்த சாதனை, நுகர்வோர் குறைகளை தாமதமின்றி மற்றும் திறம்பட தீர்ப்பதில் தமிழ்நாடு காட்டும் உறுதியையும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் தரத்தையும் வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றத்தை இந்திய அளவில் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிற நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் சுப்பையா அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்!
– க.செல்வம்.