6 மாதத்தில் பொது சிவில் சட்டம் அமல்; பாஜகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்  

Estimated read time 1 min read

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ‘சங்கல்ப் பத்ரா’ எனப்படும் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்ரல் 10) வெளியிட்டார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், இந்தத் தேர்தல் அறிக்கை வங்காளத்தை ஒரு ‘வளர்ச்சியடைந்த’ மற்றும் ‘சோனார் பங்களாவாக’ (தங்க வங்காளமாக) மாற்றும் ஒரு வரைபடமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்பது மிக முக்கியமான வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author