தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் நலப் பணிகள் குறித்து திவ்யா சத்யராஜ் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவரது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்த உதவிகளை ரசிகர்கள் பட்டியலிட்டு வந்த நிலையில், “பணம் கொடுப்பது மட்டும் மக்கள் சேவை ஆகிவிடாது; அவ்வாறு பார்த்தால் வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட நிதி கொடுக்க முடியும்” என திவ்யா அந்த வீடியோவில் விமர்சித்துள்ளார். நிதி உதவி என்பது ஒரு பகுதி மட்டுமே தவிர, அதுவே முழுமையான அரசியல் தொண்டாகிவிடாது என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும் தனது வீடியோவில், கர்மவீரர் காமராஜர் மற்றும் நல்லகண்ணு ஐயா போன்ற தலைவர்களை உதாரணமாகக் காட்டியுள்ள திவ்யா சத்யராஜ், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதே உண்மையான மக்கள் சேவை என்று கூறியுள்ளார். மக்களின் அருகிலிருந்து அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதே ஒரு தலைவனுக்கு அழகு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திவ்யா சத்யராஜின் இந்தத் தொடர் விமர்சனங்கள் தவெக ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
