கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து

கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கான காங்கிரஸின் முடிவு குறித்து அவர் பேசி ஒருநாள் கழித்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியதாவது,”

சொல்லும் பேச்சும் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலன்களைக் காக்க, திமுக எதுவும் செய்யவில்லை. #Katchatheevu குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டன” என தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி, இலங்கைக்கு கச்சத்தீவை ஒப்படைத்ததற்காக காங்கிரஸைத் தாக்கியது மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களை இந்த முடிவு பலவீனப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

You May Also Like

More From Author