பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் ஆதரவாளர்கள் அவரை சந்திக்கக் கோரி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
துணை ஆணையர் டாக்டர் ஹசன் வக்கார் சீமா கையெழுத்திட்ட இந்த உத்தரவு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை அமலில் இருக்கும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை
