சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது.
வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் இது. சாஞ்சி மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான வாங் சியாவோ என்ற பெண் சிறுநீரகம் செயலிழந்து உயிர் வாழப் போராடி வந்தார்.
ஒரு வருடத்திற்குள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை எனில் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்ததால் மிகவும் கவலையுடன் வாழ்க்கையை நகர்த்தி வந்தார். உறவினர்கள் யாரும் கிட்னி தர முன்வராததால் வாங் சியாவோ, புற்றுநோயாளிகள் குழுவில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் தன்னை திருமணம் செய்து கொள்ளும் ஆணை அன்புடன் பராமரிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தான் இந்த உலகில் வாழ விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த யூ சென்பிங் என்ற நபர், வாங் சியாவோவின் இரத்த வகைக்கு பொருந்தினார்.
தொடர்ந்து 2013இல் இருவரும் அமைதியாக ஒப்பந்த திருமணம் செய்துகொண்டனர். ஒப்பந்தத்தின்படி, வாங் அவரைப் பராமரிப்பார். அவர் இறந்த பிறகு கிட்னியை பெறுவார். ஆனால் சில நாட்களில் இந்த ஒப்பந்தம் உணர்வுமிக்க காதலாக மாறியது.
இயற்கை அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கியது. இருவரின் உடல்நிலையம் மேம்பட்டது. சாவின் விளிம்பில் இருந்த இருவரும் தற்போது ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
விரக்தியில் பிறந்த ஒப்பந்தம் காதலாக மாறிய கதை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
