சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 12ஆம் நாளிரவு, பாகிஸ்தான துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான டாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்குமிடையில் பாகிஸ்தாள் மேற்கொண்ட இணக்க முயற்சி குறித்து டார் விளக்கிக் கூறினார். பாகிஸ்தானுக்கு சீனா அளித்த ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சீனாவுடன் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்க இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று  பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக டார் தெரிவித்தார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்குமிடையில் பாகிஸ்தான் இணக்கம் செய்வதற்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author