தாய்லாந்து – டெல்லி விமான விபத்து விசாரணையில் அம்பலம்  

Estimated read time 0 min read

பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா ஏஐ2379 விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே சரிந்து 24 பேர் காயமடைந்த சம்பவத்தில், அந்த விமானத்தின் தலைமை விமானிக்கு நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4 அன்று 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் பறந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், நடுவானில் பயணித்தபோது திடீரென 300 அடி உயர மாறுபாட்டைச் சந்தித்தது. இதில் 20 பயணிகளும் 4 விமானப் பணிப்பெண்களும் காயமடைந்தனர்.
பின்னர் விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறக்கப்பட்ட நிலையில், இரு விமானிகளும் உடனடியாக பறக்கும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

You May Also Like

More From Author