தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக வேரறுக்கும் நோக்கில், ₹264 கோடி நிதியியக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப் படைகளை அமைத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக மாவட்டம் தோறும் சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பதவியேற்றபோது உறுதியளித்திருந்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 65 சிறப்பு அதிரடிப் படைகளை முதல்வர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இதற்கான அரசாணையை மாநில உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை: Rs.264 கோடி நிதியுடன் 65 படைகள் அமைப்பு
