தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

Estimated read time 0 min read

சென்னையில் அடையாறு கூவம் ஆற்றை தூர்வாரும் பணிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, உழைக்கும் விவசாயிகளை கைவிட்டு விடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், ஏரி குளங்களை தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பொருட்டு தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அடையாறு கூவம், வேளச்சேரி நாராயணபுரம் ஏரி ஆகியவற்றை தூர்வாரும் பணி தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 22 ஆயிரம் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனக் கூறிய அவர், தருமபுரி மாவட்டத்திற்கு அனைத்து திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

You May Also Like

More From Author