பெங்களூரில் Zepto நிறுவனத்தின் கிடங்கு பூட்டி சீல்: கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை  

Estimated read time 1 min read

உணவு பொருட்களைச் சேமித்து வைப்பதிலும், லேபிளிடுதல் மற்றும் கையாளுதலிலும் விதிகளை மீறியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் சிறப்பு ஆய்வுக் குழு பெங்களூரு ஹொஸ்கோடே பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல ஜெப்டோ நிறுவனத்தின் கிடங்கை பூட்டி சீல் வைத்துள்ளது.
அரசு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்நடவடிக்கை குறித்துப் பேசிய Zepto நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுகளின் போது முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறைகளை நிவர்த்தி செய்யவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author