இனி 90% சதவீதமாக உயர்த்துவோம்..‌ மீண்டும் அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ஈரான்…? அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை..! 

Estimated read time 0 min read

அமெரிக்காவுடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ஈரான் அதிரடியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது.

தற்போது 60 சதவீதமாக இருக்கும் யுரேனியச் செறிவூட்டலை, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான் நாடாளுமன்றக் குழுவின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

அணுஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான 90 சதவீதச் செறிவூட்டல் என்பது ஈரானின் முதன்மையான விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்றும், இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author