அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புக்கு ஷிச்சின்பிங் அளித்த வரவேற்பு விருந்து

Estimated read time 1 min read

 

சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பை வரவேற்கும் விதம், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 14ஆம் நாளிரவு மக்கள் மாமண்டபத்தில் விருந்து அளித்தார். இதில் அவர்கள் முறையே உரை நிகழ்த்தினர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்க ஆண்டாகும். சீன மக்கள் 5000 ஆண்டுகளுக்கும் மேலான சீன கலாசாரத்தின் ஆழமான அடித்தளத்தில் உயர்தர வளர்ச்சி மூலம் சீனாவின் நவீனமயமாக்கலை பன்முகங்களிலும் முன்னேற்றி வருகின்றனர். இவ்வாண்டு அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 250ஆம் ஆண்டு நிறைவாகும். அமெரிக்க நாட்டினர்கள் அமெரிக்காவின் வளர்ச்சியை புதிய பயணத்துக்கு முன்னெடுத்து செல்கின்றனர். இருநாட்டவர்கள் மாபெரும் மக்கள் ஆவர். சீன தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்குவது, அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்தாக்குவது ஆகிய திட்டங்கள் ஒரே திசையில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து உலகிற்கு நன்மைபுரிய முடியும் என்று குறிப்பிட்டார்.

புதிய நிலைமையில் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் பலமுறை சந்திப்பு மற்றும் தொலைபேசி தொடர்பு மேற்கொண்டு, இருநாட்டு உறவை நிலையாக பராமரித்து வருகின்றோம். சீன-அமெரிக்க உறவானது தற்போதைய உலகில் மிக முக்கியமான இருதரப்பு உறவு ஆகும் எனவும் இவ்வுறவை சீராக வளர்க்க வேண்டும் எனவும் ஒருமனதாக கருதுகிறோம். இருநாடுகள் எதிராளிகளாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். உத்திப்பூர்வ நிலைத்தன்மையுடைய ஆக்கப்பூர்வமான சீன-அமெரிக்க உறவை உருவாக்கி, உலகிற்கு அதிக அமைதி, செழுமை மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வரவும் உடன்பட்டுள்ளோம் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

டிரம்ப் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது இப்பயணம் முக்கியமான ஒன்று. இருதரப்பினரும் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க-சீன உறவு உலகில் மிக முக்கியமான இருதரப்பு உறவு. இருநாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி உலகிற்கு அருமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author