கேரள மாநில முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு – நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிவிப்பு!

Estimated read time 0 min read

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கேரளத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீஷனை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது.

கேரளத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில், 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதனால் கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. இருப்பினும் கடந்த 11 நாட்களாக முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இழுபறி நீடித்து வந்தது.

கேரள முதலமைச்சராக கே.சி.வேணுகோபாலை தேர்வு செய்ய ராகுல் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ராகுல் காந்தியின் முடிவு கேரள காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் அவர் பின் வாங்கினார்.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட வி.டி.சதீசனை

கேரளத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சதீசனின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

You May Also Like

More From Author