22வது ம்தோ ரப் பா என்னும் முதுகலை பட்டம் வழங்கும் விழா

திபெத் மரபுவழி புத்தமதத்தின் 22வது ம்தோ ரப் பா என்னும் முதுகலை பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வு அண்மையில் பெய்ஜிங்கிலுள்ள சீனாவின் உயர் மட்ட திபெத்திய பௌத்த கல்லூரியில் நடைபெற்றது. திபெத் மரபுவழி புத்தமதத்தின் கேலூக், சங்க்யா, கோனாங் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 34 மாணவர்கள் ம்தோ ரப் பா என்னும் முதுகலை பட்டத்தைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு பிறகு, பான்சென் லாமா கோய்கி கைபோ, புதிய பட்டதாரிகளைச் சந்தித்து பேசினார்.

திபெத் மரபுவழி புத்தமதத்தின் மூன்று நிலை பட்டங்கள் அமைப்பு முறை 2004ஆம் ஆண்டு துவங்கியது முதல் இதுவரை, உயர் மட்ட திபெத்திய பௌத்த கல்லூரி, சீனாவின் சிட்சாங், சிச்சுவான், யுன்னான், கான்சூ, ட்சிங்ஹாய் ஆகிய இடங்களிலுள்ள முக்கிய துறைவியர் மடங்களைச் சேர்ந்த 433 மாணவர்களுக்கு, ம்தோ ரப் பா என்னும் முதுகலை பட்டத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author