லக்னோவில் வெள்ளிக்கிழமை (மே 15) நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் வீரர் ஆகாஷ் சிங் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இந்த சீசனில் தனது முதல் போட்டியை விளையாடிய 24 வயதான ஆகாஷ் சிங், நான்கு ஓவர்களில் வெறும் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அவர் ஒரு சிறிய குறிப்பை ரசிகர்களுக்குக் காட்டினார்.
அதில் “#Akki on fire – டி20 போட்டிகளில் விக்கெட் எடுப்பது எப்படி என்று ஆகாஷிற்குத் தெரியும்” என்று எழுதப்பட்டிருந்தது.
சிஎஸ்கே கேப்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய ஆகாஷ் சிங்
Estimated read time
1 min read
