தமிழ்நாட்டில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

Estimated read time 0 min read

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரஷீத், ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியராக நல்ல சிவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கைத்தறி மற்றும் கைத்தொழில், நெசவு, காதித்துறைச் செயலாளராக வெங்கடேஷ், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைச் செயலாளராக சங்கர், கூட்டுறவுச் சங்கப் பதிவாளராக லதா, தகவல் தொழில் நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக காயத்ரி கிருஷ்ணன், வேளாண்துறை இயக்குநராக இருந்த முருகேஷ், மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும், மீன்வளத்துறை இயக்குனராக இருந்த முரளிதரன், வேளாண்மைத்துறை இயக்குனராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக காயத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்”

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author