“நீ 717 கடையை மூடினா…. நாங்க 4000 கடையை மூடுவோம்” முதல்வர் என்ன செய்ய முடியும்….? டாஸ்மாக் ஊழியர்கள் விடுத்த பகீர் சவால்….! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அரசு சார்பில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் மற்றும் 8 மணி நேர வேலை உள்ளிட்ட அத்தியாவசியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் புதிய அரசிடம் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளனர்.

இந்த நியாயமான கோரிக்கைகளை அரசு தட்டாமல் நிறைவேற்றவில்லை என்றால், ஒட்டுமொத்தக் கடைகளையும் மூடிப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

“அரசு 717 கடைகளை மூடலாம், ஆனால் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்றால், மீதமிருக்கும் 4000 கடைகளையும் சங்கமே சேர்ந்து மூடும்; அப்போது புதிய முதல்வர் விஜய் என்ன செய்வார்? என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author