தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்..!

Estimated read time 1 min read

தீபாவளி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:- ரயில் எண்: 06156 திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் (2 சேவைகள்).

மறுமார்க்கத்தில் ரயில் எண்: 06155 செங்கல்பட்டு – திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் (2 சேவைகள்). இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06044) வருகின்ற 19ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 2.10 மணிக்கு வந்தடைகிறது. அந்த ரயில் சேலத்தில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06043) வருகிற 22ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12:15 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை வழியாக மாலை 5:25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கிருந்து அந்த ரயில் 05.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.

மேலும் சென்னை சென்ட்ரல், மங்களூரு சிறப்பு ரயில் வண்டி எண் (06001) வருகின்ற 20ஆம் தேதி மதியம் 12:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காட்பாடி ஜோலார்பேட்டை வழியாக மாலை 5:25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 5:35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூருக்கு அந்த ரயில் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் மங்களூரு, சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06002) வருகின்ற 21ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இந்த ரயில் 3.50 மணிக்கு புறப்பட்டு, காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடைகிறது.

மேலும் திருவனந்தபுரம், வடக்கு சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06108) வருகின்ற 21ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மறுநாள் காலை 05.07 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 5.17 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை காட்பாடி வழியாக காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறு மார்க்கமாக சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06107) வருகின்ற 22ஆம் தேதி மதியம் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 7.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது. இந்த ரயில் பயணங்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author