அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் நிவாரணப் பணியகம் ஜனவரி 12ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்துக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு 160 சதுர கிலோமீட்டரைத் தாண்டியது. இது, சான் பிரான்சிஸ்கோ நகரின் நிலப்பரப்பை விட அதிகமாகும்.
மேலும், இந்த தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காணாமல் போயுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 700க்கும் மேலானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் வாழ்கின்றனர்.
சாண்டா அனா என்ற புயல் காற்று 13ஆம் நாள் கலிபோர்னிய மாநிலத்தை மீண்டும் பாதிக்கும் என்றும், அதனால் 14ஆம் நாள் வரை தீயணைப்பு நிலைமை மோசமாக இருக்கும் என்று வானிலை நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.