5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் 2-ம் கட்டமாக நெதர்லாந்து சென்றடைந்த, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு தரப்பிலும், இந்திய வம்சாவளியினர் தரப்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று நெதர்லாந்து சென்றடைந்தார்.
தனி விமானம் மூலம் ஆம்ஸ்டர்டாம் சென்ற அவரை, நெதர்லாந்து மன்னரின் ராணுவ தலைவரும், ரியர் அட்மிரலுமான லுட்கர் புரும்மெலார், வெளியுறவுத்துறை அமைச்சர் டோம் பெரென்ட்சன், நெதர்லாந்திற்கான இந்திய தூதர் குமார் துஹின் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
