ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நிதானமாக விளையாடிய கார்த்திக் ஷர்மா 42 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு, அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடி துவக்கத்தை கொடுத்தார். வெறும் 38 பந்துகள் மட்டுமே விளையாடிய அவர் 90 ரன்கள் குவித்து லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். பூரானின் தொடர் சிக்சர்களும் ஸ்கோருக்கு வலுசேர்க்க, அந்த அணி 16.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி, 6-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
