சீனா தனது 4-வது விமானம் தாங்கி கப்பலைக் கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்துச் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், லியோனின் மாகாணத்தின் டாலியன் கப்பல் கட்டுமான தளத்தில் சீனாவின் நான்காவது விமானம் தாங்கி கப்பல் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தாங்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கும் வகையில் அமைக்கப்படுவதாகத் தெரிகிறது என கூறப்பட்டுள்ளது.
அது அந்தக் கப்பலின் தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தி, மேம்பட்ட சாதனங்களை இயக்குவதற்கு வழிவகுக்கும் என அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.